×

ஆரவாரத்தில் நகைப்பிரியர்கள்: கடந்த 3 வாரங்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,184 வீழ்ச்சி: இன்று மேலும் சவரனுக்கு ரூ.400 குறைவு..!!

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகை பிரியர்கள் மத்தியில் மிகுந்த ஆரவாரத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்த நிலையில் இந்த வாரமும் தொடர்ந்து‌ தங்கம் விலை குறைந்ததால் சவரன் ரூ.36,192க்கு விற்பனையாகிறது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து தங்கம் விலை இறங்குமுகமாகவே இருந்து வருகிறது.

கடந்த 3 வாரங்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,184 வீழ்ச்சி அடைந்து உள்ளது. கடந்த 9ம் தேதி ரூ.39,376-ஆக இருந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.36,192-ஆக குறைந்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,769 டாலராக சரிந்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிந்துள்ளதால் இந்தியாவிலும் தங்கத்தின் விலை குறைந்து உள்ளது. நவம்பர் 9ம் தேதி 1961 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 192 குறைந்து 1769 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.4,524-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.63.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Comedians ,fray , Gold, price, fall
× RELATED மலையாள காமெடி நடிகர் மாமுக்கோயா மரணம்