×

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது; அதி கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடலில் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2-ம் தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயலால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் நீர்நிலைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக நிவர் புயல் கரையை கடந்தது. அதன்பிறகு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 2-ல் காற்றழுத்த மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இதனால் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் தமிழகத்திற்கு டிசம்பர் 2-ல் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடலில் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bay of Bengal ,Depression ,Meteorological Center , The deepest part of the Bay of Bengal became the Depression; Chance of heavy rain; Meteorological Center
× RELATED தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை...