6 மாதமாக ஜிஎஸ்டி தாக்கல் செய்யாத 5.43 லட்சம் நிறுவன பதிவு ரத்தாகிறது

புதுடெல்லி: கடந்த 6 மாதமாக ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யாத 5.43 லட்சம் நிறுவனங்களின் ஜிஎஸ்டி பதிவை ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ள வணிகர்கள், நிறுவனங்கள் மாதந்தோறும் 20ம் தேதிக்குள் ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தில் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை 80 லட்சம் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த மாதம் கணக்கு தாக்கல் செய்த, அதிக ஜிஎஸ்டி செலுத்துபவர்களில் சுமார் 25,000 பேர், நடப்பு மாதத்தில் கடந்த 20ம் தேதி ஜிஎஸ்டி கணக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லை.

இவர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் நினைவூட்டல் அனுப்பப்பட்டு வருகிறது. இதுபோல் வருவாய்த்துறை சார்பில் உயர்மட்டக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், தொடர்ந்து ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யாதவர்களின் பதிவுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 6 மாதம் மற்றும் அதற்கும் மேலாக சுமார் 5.43 லட்சம் பேர், தங்கள் நிறுவனத்துக்கான கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் இவர்களின் ஜிஎஸ்டி பதிவுகள் விரைவில் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.  என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: