அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை விரட்டி பிடித்த காவலர்

தண்டையார்பேட்டை: சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள ஈவ்னிங் பஜார் பகுதியில் வியாசர்பாடி மல்லிப்பூ காலனியை சேர்ந்த பிரபல ரவுடி ராஜேஷ் (எ) அம்மா பாய் (21), தனது கூட்டாளியுடன் வந்து, கத்தி முனையில் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். தகவலறிந்து பூக்கடை காவல் நிலைய தலைமை காவலர் ஜெய்சிங் சம்பவ இடத்திற்கு சென்று, ரவுடி ராஜேஷை மடக்கி பிடித்தார். அப்போது, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, ராஜேஷ் தப்பிக்க முயன்றுள்ளார். அவரை மடக்கி பிடித்து, ஆட்டோல் ஏற்றி, காவல் நிலையம் கொண்டு சென்றபோது, ஆட்டோவில் இருந்து குதித்து ராஜேஷ் தப்பினார். ஜெய்சிங், அவரை நடுரோட்டில் துரத்தி பிடித்து சிறையில் அடைத்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

Related Stories:

>