×

இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது: சீன விஞ்ஞானிகள் புதுக்கதை

பீஜிங்: ‘கொரோனா வைரஸ் முதன் முதலில் இந்தியாவில் இருந்து பரவி இருக்கிறது,’ என சீன விஞ்ஞானிகள் குற்றம்சாட்டி உள்ளனர். உலகத்தை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், கடந்தாண்டு டிசம்பரில்தான் சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அது பல ஆயிரம் பேரை பாதித்தது, பல நூறு பேரின் உயிரை மாய்த்தது. இதை வெளிஉலகத்துக்கு தெரியாமல் மூடி மறைக்க சீனா முயன்றது. தற்போது, உலகளவில் 6.19  கோடி பேர் இந்த வைரசால் பாதித்துள்ளனர். 14 லட்சத்து 48 ஆயிரத்து 183 பேர் பலியாகி இருக்கின்றனர். இதில், அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பது அமெரிக்காதான். கொரோனா பரவலுக்கு காரணம் சீனாதான் என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் குற்றம்சாட்டி வரும் நிலையில், சீன விஞ்ஞானிகள் போட்டுள்ள புதிய குண்டு, உலகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சீன அறிவியல் அகாடமியை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா வைரஸ் எங்கள் நாட்டில் உருவாகவில்லை. இந்தியாவில் கடந்தாண்டு (2019)  கோடையில் தோன்றி இருக்கலாம். விலங்குகளால் அசுத்தம் செய்யப்பட்ட நீர் மூலமாக மனிதர்களை தாக்கிய இந்த வைரஸ், அங்கிருந்து உகானை அடைந்து இருக்கலாம். மேலும், வங்கதேசம், அமெரிக்கா, கிரீஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி, செக் குடியரசு, ரஷ்யா, செர்பியா போன்ற நாடுகளிலும் கொரோனா தோன்றியதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன,’ என ‘கதை’ அளந்துள்ளது.



Tags : scientists ,India ,Chinese , The corona originated in India: a novel by Chinese scientists
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...