திருப்பதி தேவஸ்தான தலைவர் அறிவிப்பு உளுந்தூர்பேட்டையில் ரூ.10 கோடியில் ஏழுமலையான் கோயில் கட்ட முடிவு: சுற்றுச்சூழலை காக்க 150 பேட்டரி பஸ்கள்

திருமலை: ‘‘தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் ரூ.10 கோடி செலவில் ஏழுமலையான் கோயில் கட்டப்படும்’ என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை அன்னமய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட வாசல் வழியாக, ஏகாதசியன்று 10 நாட்கள் அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள மடாதிபதிகள், பீடாதிபதிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு வரும் டிசம்பர் 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்த நடைமுறை கொண்டுவருவதால் இதற்கான ஏற்பாடுகளை தொடங்க உள்ளோம். தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கரில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்பில் ஏழுமலையான் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>