×

உசிலம்பட்டியில் 5 பைசாவிற்கு 1 கிலோ சிக்கன்; மக்கள் குவிந்தனர்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் செயல்பட்டுவரும் பிராய்லர் கோழி இறச்சி நிறுவனம் உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் புதிய கிளையை கார்த்திகை திருநாளான நேற்று திறந்தது. திறப்புவிழா சலுகையாக ஐந்து பைசாவிற்கு ஒரு கிலோ கோழிக்கறி என அறிவித்தனர்.

இதையடுத்து நேற்று ஐந்து பைசா நாணயத்துடன் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். விற்பனையாளர்கள் கூறுகையில், ஒரு சிலரிடம் மட்டுமே ஐந்து பைசா இருக்கும் என எதிர்பார்த்தோம். நூற்றுக்கணக்கானோர் குவிந்துவிட்டனர்’’ என்றனர்.

Tags : Usilampatti , 1 kg of chicken for 5 paise at Usilampatti; People gathered
× RELATED புதினா சிக்கன்