×

வெள்ளம் பாதித்த குடியிருப்புகளை ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி ஆணையரை முற்றுகை

சென்னை: குடியிருப்புகளைச் சூழ்ந்த கழிவுநீர் கலந்த மழைநீரை அகற்ற கடந்த 4 நாட்களாக மாநகராட்சி அதிகாரி திணறி வருகின்றனர். அப்பகுதியை ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷை பொதுமக்கள் முற்றுகையிட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிவர் புயல் காரணமாக, ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர். அமைந்தகரை 8வது மண்டலத்துக்கு உட்பட்ட வில்லிவாக்கத்தில் உள்ள 15 தெருக்களில் உள்ள சுமார் 1200 வீடுகளை கழிவுநீர் கலந்த மழைநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

4 நாட்களுக்கு முன்பே அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்தப் பகுதியை ஆய்வு செய்ய வந்த  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் மழைநீர் மற்றும் கழிவுநீர் சூழ்ந்துள்ள இந்த பகுதியில் அடுத்த புயல் வருவதற்குள் தேங்கியுள்ள நீரை வெளியேற்றி உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  இதன் பின்பு, செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ் ‘‘வில்லிவாக்கம் பாபா நகர் பகுதியில் இரண்டு, மூன்று நாட்களாக மழைநீர் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நகர்புற வளர்ச்சி அதிகமானதால், கால்வாய்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.Tags : siege ,corporation commissioner , The siege of the corporation commissioner who came to inspect the flood-affected flats
× RELATED சிவசைலத்தில் முற்றுகை முயற்சி