அனைவருமே தேச விரோதிகள் என்றால் யார் தான் இந்தியர்கள்? பாஜகவினர் மட்டும் தான் இந்தியர்களா மெகபூபா முப்தி சாடல்

ஸ்ரீநகர்: முஸ்லீம்கள், சீக்கியர்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள், என அனைவருமே தேச விரோதிகள் என்றால் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டும் தான் இந்தியர்களா என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில்கலுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாக போட்டியிடுகின்றன.

இந்நிலையில் தேர்தலில் தங்கள் போட்டியிடுவதாக அறிவித்தது முதல், அடக்குமுறை அதிகரித்துள்ளதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் குற்றம் சாடியுள்ளார். பரப்புரை செய்யவே அனுமதிக்காவிட்டால் வேட்பாளர்கள் என்ன செய்ய முடியும் என்றும் அவர் வினவி உள்ளார். முஸ்லீம்களை பாகிஸ்தானி என்றும், சீக்கியர்களை காலிஸ்தானி என்றும், செயற்பாட்டாளர்களை நகர்புற நக்சலைட்டுகள் என்றும் பாஜக அழைப்பதாக முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.அனைவருமே தேச விரோதிகள் என்றால் யார் தான் என கேள்வி எழுப்பியுள்ள முப்தி பாஜகவினர் மட்டும் தான் இந்தியர்களா என்றும் சாடியுள்ளார்.

காஷ்மீரில் தேர்தலைகளை நடத்துவது மட்டுமே பி[பிரச்சனைகளை தீர்த்து விடாது என்றும் நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்கும் வரை பிரச்சனைகள் தீராது என்றும் கூறியுள்ளார்.

Related Stories: