மத்திய பெண் அமைச்சருக்கு கொரோனா: கான்பூரில் இருந்து டெல்லிக்கு மாற்றம்

புதுடெல்லி: மத்திய பெண் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் கான்பூரில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறியுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது உமிழ்நீர் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஹலாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், அவருக்கு மார்பு தொற்று மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக எய்ம்ஸ் அறிக்கையின்படி, ‘சாத்வி நிரஞ்சன் ஜோதி, கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதால், எய்ம்ஸ் மருத்துவமனையின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: