×

நாகாலாந்து மாநிலத்தில் நாய் இறைச்சி தடை உத்தரவு நிறுத்திவைப்பு

கவுகாத்தி: நாகாலாந்தில் நாய் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்த அரசின் உத்தரவை, அம்மாநில உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் நாய் இறைச்சி விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால், சிக்கிம் போன்ற மாநிலங்கள் நாய் இறைச்சிக்கு தடை விதித்துள்ளன. சமீபத்தில் நாகாலாந்து அரசும் கடந்த ஜூலை 2ம் தேதி நாய் இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்தது. அதில், நாய் இறைச்சியை வணிக நோக்கில் இறக்குமதி செய்தல், உள்ளூர் மார்க்கெட்டில் விற்பனை செய்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டது.

மேலும், நாய்கள் இறைச்சி தடை தொடர்பாக அரசின் உத்தரவை எதிர்த்து, கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும், செப். 14ம் தேதிக்குள் நாகாலாந்து அரசு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் இவ்வழக்கு தொடர்பாக பதிலளிக்காததால், அரசின் தடை உத்தரவை நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

Tags : Nagaland , Suspension of dog meat ban order in Nagaland
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...