தோனி போன்ற வீரர் இந்திய அணிக்கு தேவை

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது பற்றி வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மைக்கேல் ஹோல்டிங் கூறியதாவது: இந்திய அணியில் நல்ல வீரர்கள் உள்ளனர். விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டோனி இல்லாமல் தடுமாறுவது  நன்றாக தெரிகிறது. டோனி மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வரும்போது, சேசிங் செய்வதற்கான மொத்தப் பணியையும் அவர் எடுத்துக்கொள்வார். டோனி இருந்தபோது இந்திய அணி சிறப்பாகச் சேசிங் செய்தது. டாஸ் வெல்லவேண்டும் என்ற பயம் அவர்களுக்கு இல்லை.

தற்போதைய அணியிலும் சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. சில திறமையான வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதைப் பார்க்க முடிந்தது. ஆனாலும், டோனி மாதிரி ஒரு வீரர் அணிக்குத் தேவைப்படுகிறார். அவரைப் போல வலிமையான வீரர் தேவை, என தெரிவித்துள்ளார்.

Related Stories: