×

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.25 கோடியாக உயர்வு; 14.58 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.!!!

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.58 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக   நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் 14 லட்சத்து 58 ஆயிரத்து 093 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 6 கோடியை 25 லட்சத்து 62 ஆயிரத்து 850 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 கோடியை 31 லட்சத்து 88 ஆயிரத்து 004 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1 கோடியை 79 லட்சத்து 16 ஆயிரத்து 753 பேர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 லட்சத்து 05 ஆயிரத்து 238 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா   -    பாதிப்பு - 13,610,357 , உயிரிழப்பு - 272,254 , குணமடைந்தோர் - 8,041,239
இந்தியா      -    பாதிப்பு - 9,390,791,  உயிரிழப்பு - 136,705,  குணமடைந்தோர் - 8,799,249
பிரேசில்      -    பாதிப்பு - 6,290,272  ,  உயிரிழப்பு - 172,637,  குணமடைந்தோர் - 5,562,539

ரஷியா       -   பாதிப்பு - 2,242,633,  உயிரிழப்பு - 39,068  ,  குணமடைந்தோர் - 1,739,470
பிரான்ஸ்     -   பாதிப்பு - 2,208,699 ,  உயிரிழப்பு - 52,127 , குணமடைந்தோர்  - 161,137
இத்தாலி   -     பாதிப்பு - 1,564,532,  உயிரிழப்பு - 54,363 ,  குணமடைந்தோர்  - 720,861

அர்ஜென்டினா  -    பாதிப்பு - 1,413,375 ,  உயிரிழப்பு -38,322,  குணமடைந்தோர்- 1,242,877
கொலம்பியா   -    பாதிப்பு - 1,299,613 ,  உயிரிழப்பு -36,401 ,குணமடைந்தோர் -1,197,204


Tags : corona victims , Worldwide, the number of corona victims has risen to 6.25 crore; 14.58 lakh deaths !!!
× RELATED 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: நேற்று ஒரே நாளில் 19,182 பேர் குணமடைந்தனர்