×

சொல்லிட்டாங்க...

* பாஜவின் கோடீஸ்வர நண்பர்கள் டெல்லி வந்தால் சிவப்பு கம்பள வரவேற்பு பெறுகிறார்கள். விவசாயிகள் டெல்லி வந்தால் சாலைகள் அடைக்கப்படுகிறது. - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

* தமிழகஅரசின் மருத்துவ கல்லூரிகளில் உள்ள உயர் சிறப்பு மருத்துவ கல்வி இடங்கள் அனைத்தும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதை உறுதி செய்ய வேண்டும்.   - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என இறுதியில் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்கிற சர்வாதிகார நிலைக்கு நாட்டை மாற்ற பாஜ ஆட்சி முயன்று வருகிறது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* மருத்துவ மாணவர்கள் உள்இடஒதுக்கீட்டில், நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓரளவு நீதியும், நியாயமும் கிடைத்திருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Tags : Told...
× RELATED சொல்லிட்டாங்க...