கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி அங்கு தலா 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது. கேப்டவுனில் நடந்த முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. டு பிளெஸ்ஸி அதிகபட்சமாக 58 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். வாண் டெர் டசன் 37 ரன் (28 பந்து, 3 சிக்சர்), கேப்டன் டி காக் 30 ரன் (23 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 3, ஆர்ச்சர், டாம் கரன், கிறிஸ் ஜார்டன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.