சில்லி பாயின்ட்...

* லங்கா பிரிமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் தம்புல்லா வைகிங் 4 ரன் வித்தியாசத்தில் (டி/எல் விதி) கண்டி டஸ்கர்ஸ் அணியை வீழ்த்தியது. தம்புல்லா 20 ஓவரில் 195/4; சமித் படேல் 58, தசுன் ஷனகா 73. கண்டி டஸ்கர்ஸ் அணி 9.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட, டி/எல் விதிப்படி வைகிங் வென்றதாக அறிவிக்கப்பட்டது (குர்பாஸ் 30, குசால் மெண்டிஸ் 34*).

* நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி வீரர்களில் இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

* ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த முதல் ஒருநாள் போட்டியின்போது இந்திய அணி குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களைப் பூர்த்தி செய்யத் தவறியது. இதையடுத்து, ஒரு ஓவர் தாமதமாகப் பந்துவீசியதற்காக இந்திய வீரர்களுக்கான ஊதியத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி போட்டி நடுவர் டேவிட் பூன் அறிவித்துள்ளார்.

* ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று நடந்த மகளிர் பிக் பாஷ் லீக் டி20 தொடரின் பைனலில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சிட்னி தண்டர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 86 ரன்; சிட்னி தண்டர் 13.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்.

* மைக் டைசன் - ராய் ஜோன்ஸ் ஜூனியர் மோதும் காட்சி குத்துச்சண்டை போட்டி கலிபோர்னியாவின் கார்சன் நகரில் இன்று நடைபெறுகிறது.

Related Stories: