×

திரிணாமுல் அதிருப்தி தலைவர் சுவேந்துவை வளைக்க பாஜ பேச்சுவார்த்தை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. இவர், மம்தாவுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் பதவியையும், கட்சிப் பதவிகளையும் ராஜினாமா செய்தார். இம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடப்பதால், கட்சிக்கு பலம் சேர்ப்பதற்காக சுவேந்துவை தங்கள் கட்சியில் இணைப்பதற்கான முயற்சியை பாஜ எடுத்துள்ளது. இது தொடர்பாக, அவருடன் பாஜ தலைவர்கள் பலர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : BJP ,Trinamool ,Svendu , BJP talks to bend Trinamool dissident leader Svendu
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ...