மெரினா கடற்கரையில் துணை ஆணையர் தலைமையில் குதிரை படையினர் ரோந்து

சென்னை: நிவர் புயல் காரணமாக கடல் அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிலர் மெரினாவில் கடல் சீற்றத்தை பார்த்து செல்பி எடுக்க முயற்சி செய்து, கடல் அலையில் சிக்கி விடுகின்றனர். இதை தடுக்க சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்படி அண்ணாசதுக்கம், மெரினா காவல் நிலைய போலீசார், குதிரைப்படை போலீசாருடன் இணைந்து, மெரினா கடற்கரைபகுதி சர்வீஸ் சாலை, மற்றும் மணற்பரப்பில் குதிரை படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக போக்குவரத்து வடக்கு துணை ஆணையர் கிருஷ்ணராஜ் (பொறுப்பு திருவல்லிக்கேணி காவல் மாவட்டம்) தலைமையில் நேற்று மாலை போலீசார் மற்றும் குதிரைப்படை வீரர்களுடன் சேர்ந்து மெரினா கடற்கரை பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து, பொதுமக்கள் வேடிக்கை பார்க்க கடற்கரை மணற்பரப்பில் அனுமதிக்காதவண்ணம் ரோந்து சுற்றி வந்தனர்.

Related Stories: