×

நிவர் புயல் பாதிப்பு தமிழகத்தில் 2,476 மின்கம்பங்கள் பழுது: மின்வாரிய அதிகாரி தகவல்

சென்னை: நிவர் புயலில் சிக்கி தமிழகம் முழுவதும் 2,476 மின்கம்பங்கள் பழுதடைந்ததாக மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிவர் புயல் கரையை கடப்பதாக அறிவிக்கப்பட்டவுடன், அதற்கு தகுந்தார்போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் புயல் கரையை கடக்கும் போதும், கடந்த பிறகும் வீசிய பலத்த காற்றால் சேதமடைந்த மின்கம்பங்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 2,476 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. இதில் அதிகபட்சமாக 536 மின்கம்பங்கள் சென்னையில் சாய்ந்து விழுந்தது. இவற்றை உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Nivar ,storm , 2,476 power poles repaired in Tamil Nadu
× RELATED கரூர் சுக்காலியூர் அருகே சரிந்து...