9,468 ஹெக்டேர் பயிர்கள் சேதம் முழுமையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்கிட வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணி வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில் 6000 ஏக்கர், காஞ்சிபுரம் 1500, விழுப்புரம் 5000 ஏக்கர் வரை அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இதில் கணிசமான வயல்களில் நெல்பயிர் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளன. திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலும் அறுவடைக்கு தயாராயிருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது. புயல் மழையில் பயிர் சேதங்களை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டார்கள் ஏழு மாவட்டங்களில் நெற்பயிர்கள் உட்பட 9468 ஹெக்டேரில் நெற்பயிர்கள் உள்ளிட்ட விவசாய பயிர்கள் சேதமடைந்திருப்பதாக மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் சேதம் அதிகம்.எனவே, பயிர் சேதம் குறித்து முழுமையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: