×

3,400 மருத்துவ இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: 3,400 இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்திருப்பது வேதனை அளிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நடப்பாண்டில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 8.41 லட்சம். இதில் 3.44 லட்சம் பேர், அதாவது 41 சதவிகிதம் பேர் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள். தமிழகத்தில் உள்ள 25 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3400 இடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 3400 இடங்களில் 405 இடத்தில்தான் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி காங்கிரஸ் அரசு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி, அரசாணை பிறப்பித்ததை அறிந்த தமிழக அரசும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தது. அதற்கு பிறகுதான் வேறு வழியில்லாமல் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கினார். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓரளவு நீதியும், நியாயமும் கிடைத்திருக்கிறது. இத்தகைய அவலநிலை தமிழக மாணவர்களுக்கு ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் மத்திய பாஜ அரசும், அதை தடுத்து நிறுத்த தவறிய அதிமுக அரசும் என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

Tags : government school students ,places ,KS Alagiri , Opportunity for 405 government school students in 3,400 medical places: KS Alagiri charge
× RELATED புதுச்சேரியில் அரசுப்பள்ளி...