மெட்ரோ, பேருந்து, புறநகர் ரயில் சேவையை இணைக்கும் ஒரே பயண அட்டை திட்டம் எங்கே? சமூக ஆர்வலர்கள் கேள்வி

சென்னை: மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காகவும், ஒரே பயண அட்டை மூலம் மாநகர பேருந்து, மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து ‘ஒரே கார்டு’ திட்டத்தை 2017ல் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. மெட்ரோ ரயில் பயண அட்டையை மாநகர பேருந்து நடத்துனரின் டிக்கெட் கொடுக்கும் இயந்திரத்துடன் பயன்படுத்தி பார்க்கப்பட்டது. ஆனால், இப்பணிகளை மேற்கொண்டு செயல்படுத்துவதில் இழுபறி நீடித்தது. தொடர்ந்து புறநகர் ரயிலிலும் சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஒரே கார்டு திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் திட்டமிட்டபடி செயல்படுத்த முடியாமல் மெட்ரோ ரயில் நிர்வாகம் திணறி வருகிறது. செயல்படுவதில் ஏன் சுணக்கம் என்பது தெரியவில்லை’’ என்றனர்.இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரி கூறுகையில், ‘‘ஸ்மார்ட் கார்டுக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரத்தை கொண்டுவர வேண்டும். இப்பணி தாமதமாகி வருகிறது. 3 போக்குவரத்து சேவைகளையும் இணைத்து ஒரே கார்டில் பயணம் செய்வது இந்த ஆண்டிற்குள் செயல்படுத்த முடியாது’’ என்றார்.

Related Stories: