×

இன்று முதல் பிரசாரம் அதிமுக ஆட்சியின் அவல நிலையை முன்வைப்போம்: கனிமொழி எம்.பி. பேட்டி

சென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., இன்று காலை சேலத்தில் இருந்து தொடங்குகிறார். அதற்காக அவர் நேற்று மாலை விமானத்தில் சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு சென்றார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: நாங்கள் ஆறு மாதத்துக்கு முன்னதாகவே பரப்புரையை தொடங்குவது பயத்தால் அல்ல. எங்களுடைய வெற்றி உறுதி செயயப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் மக்களோடு பயணித்து அவர்களின் உணர்வுகளை தெரிந்து கொள்வதற்காகத்தான் முன்னதாக பரப்புரையை தொடங்கியுள்ளோம். தேர்தல் பிரசாரத்தில் திமுக ஆட்சியின் கடந்த கால சாதனைகளை மக்களுக்கு விளக்கிக்கூறுவோம். அதோடு நடந்து கொண்டிருக்கும் இந்த அதிமுக ஆட்சியின் அவல நிலையை மக்களிடம் முன்வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : campaign ,AIADMK , From today, the campaign will present the plight of the AIADMK regime: Kanimozhi MP Interview
× RELATED அதிமுக அரசு தேசிய அளவில் பல்வேறு...