உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் விலக்கு பெற தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: வைகோ கேள்வி

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை: மத்திய பாஜ அரசின் வஞ்சகத்தால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1922 முதுநிலை மருத்துவ இடங்களிலும், 369 உயர் சிறப்பு மருத்துவ இடங்களிலும் தமிழகத்தில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் முழுமையாக இடம் பெறும் வாய்ப்பு பறி போய் இருக்கிறது. தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்று ((INI-CET)) நுழைவுத்தேர்வு ஏஐஎம்எஸ், ஜிப்மர், பிஜிஐ சண்டிகர் போன்றவற்றிக்கு பாஜ அரசு நீட்டிலிருந்து எப்படி விலக்கு அளித்து இருக்கிறதோ அதைப் போன்று உயர்

சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் விலக்கு பெற எடப்பாடி பழனிசாமி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மருத்துவக் கல்வியில் தமிழகத்தின் உரிமைகளை பலி கொடுத்து வரும் அதிமுக அரசின் கையறுநிலை கடும் கண்டனத்துக்கு உரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: