மேற்கு வங்க நிலக்கரி சுரங்க முறைகேடு 4 மாநிலத்தில் ஒரே நேரத்தில் 45 இடங்களில் சிபிஐ ரெய்டு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது பற்றி சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதில், ‘லாலா’ என்று அழைக்கப்படும் அனூப் மஞ்சி என்பவர் கனுஸ்தோரியா, காஜ்ரோ பகுதிகளில் அரசு நிறுவனமான கிழக்கு நிலக்கரி லிமிடெட் குத்தகைக்கு விட்டுள்ள சுரங்கத்தில், அதன் ஊழியர்கள், ரயில்வே அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் உதவியுடன் நிலக்கரி திருடியது உறுதியானது. இதைத் தொடர்ந்து, அனூப், கிழக்கு நிலக்கரி நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், கிழக்கு நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் 2 பொது மேலாளர்கள் மற்றும் 3 பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் நிலக்கரி திருட்டு நடப்பது தொடர்பாக, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் 45 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ.யினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: