லடாக்கில் பாங்காக் ஏரி பகுதியில் கடற்படை கமாண்டோ வீரர்கள் சீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சீன ராணுவத்தை. கடந்த மே மாதம் இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. அப்போது முதல், இந்த எல்லையில் இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. எல்லையில் இருநாடுகளும் ராணுவ வீரர்களை குவித்து வருகின்றன. இப்பிரச்னைக்கு சமூக தீர்வு காண, இருநாடுகளும் இதுவரை 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதில், படைகளை வாபஸ் பெறுவதாக சீனா கூறியுள்ள போதிலும், இதுவரையில் அதை நிறைவேற்றவில்லை. ஏற்கனவே, குளிர்காலத்தில் அது இந்தியா மீது தாக்குதல் நடத்தக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதனால், இந்திய ராணுவம் உஷார் நிலையில் உள்ளது. இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காக் ஏரி அருகே இந்திய கடற்படையின் சிறப்பு அதிரடி பிரிவான, ‘மார்க்கோஸ்’ என்ற கடற்படை கமாண்டோக்களை இந்தியா திடீரென நிறுத்தியுளளது. இது, சீனாவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுபற்றி கூறிய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ‘‘‘முப்படைகள் ஒருங்கிணைந்து செயல்படவும், லடாக்கின் சீதோஷ்ண நிலையை எதிர்கொள்ள தயாராகவும் கடற்படை கமாண்டோ படை கூடுதலாக அழைக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Related Stories: