என்எஸ்ஜி உட்பட ‘தலை’ இன்றி தவிக்கும் 4 பாதுகாப்பு படைகள்

புதுடெல்லி: நிரந்தர தலைமை நியமிக்கப்படாததால் நான்கு மத்திய போலீஸ் அமைப்புகள் வழக்கமான தலைமையின்றி செயல்பட்டு வருகின்றன. தேசிய முக்கியத்துவம் பெற்ற ‘என்எஸ்ஜி’ எனப்படும் தேசிய பாதுகாப்பு படை, என்சிபி எனப்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பிபிஆர்டி எனப்படும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் ஆகியவற்றின் தலைமை பொறுப்புகள் ஏற்கனவே காலியாக உள்ளன. தேசிய பாதுகாப்பு படைப்பிரிவு தலைவர் ஏகே சிங் கடந்த செப்டம்பர் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இந்த பொறுப்பானது இந்தோ-திபெத் படை தலைவர் எஸ்எஸ் தேஸ்வாலிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை தலைவர் ராகேஷ் அஸ்தனா, கடந்த ஜூலை முதல் கூடுதலாக போதைப் பொருள் தடுப்பு பிரிவை கவனித்து வருகிறார். இதேபோல், சிறப்பு செயலாளர் விஎஸ்கே கமுதிக்கு போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, தலைமையின்றி செயல்படும் பட்டியலில் 4வது அமைப்பாக மத்திய தொழிற் பாதுகாப்பு படையும் (சிஐஎஸ்எப்) சேர்ந்துள்ளது. இதன் தலைவர் ராஜேஷ் ரஞ்சன் இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார். இந்த பொறுப்பு,  சிஐஎஸ்எப் பொறுப்பை கூடுதலாக சாஸ்திர சீமா பால் காவல்படையின் இயக்குனர் ஜெனரல் குமார் ராஜேஷ் சந்திராவிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழுதான், இந்த காலி இடங்களுக்கு அதிகாரிகளை நியமிக்கும். எனவே, விரைவில் இந்த குழுவின் கூட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: