×

நாட்டை சர்வாதிகார நிலைக்கு கொண்டு செல்ல பாஜ முயற்சி: முத்தரசன் பரபரப்பு குற்றச்சாட்டு

திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என இறுதியில் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்கிற சர்வாதிகார நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல மத்திய பாஜக ஆட்சி தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்து. இதை முறியடிக்க கூடிய வகையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும்.மருத்துவ மேற்படிப்பிற்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த முடியாது என்பது சமூக நீதிக்கு எதிரானது. இதை எதிர்த்தும் மக்கள் போராட வேண்டும்.

ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. நாடு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடத்துவதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது என பிரதமர் கூறுவது வெறும் காரணங்கள்தான். ஆனால், அவர்களின் நோக்கம் என்பது வேறு. தங்களுக்கு எதிரான மத்திய அரசின் யுத்தத்திற்கு எதிராக விவசாயிகள் போராடுகிறார்கள். விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடரும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Tags : BJP ,country ,state ,Mutharajan , BJP's attempt to take the country to a dictatorial level: Mutharajan accused of incitement
× RELATED ஒன்றரை கிலோ பறிமுதல் கண்ணக்குடியில்...