ஊழலில் சொத்து குவித்த சேலம் வனத்துறை அதிகாரி, மனைவிக்கு 3 ஆண்டு சிறை: ரூ.2 லட்சம் அபராதம் சொத்து பறிமுதல்

சேலம்: சேலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்த சேர்த்த வழக்கில் வனத்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனைவிதிக்கப்பட்டது. சேலம் ஜாகீர் அம்மாப்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் (65). இவர் மேட்டூர் வனச்சரகத்தில் ரேஞ்சராக கடந்த 2004ல் பணியாற்றி வந்தார். அப்போது இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.26 லட்சத்துக்கு சொத்து வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். தற்போது இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.இதையடுத்து ரேஞ்சர் மோகன், அவரது மனைவி சித்ராமணி(60) ஆகியோர் மீதான இந்த வழக்கு சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் நீதிபதி ஜெயந்தி நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். ஓய்வு பெற்ற ரேஞ்சர் மோகனுக்கும் அவரது மனைவி சித்ராமணிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்ததோடு, சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

Related Stories: