விவசாயிகள் போராட்டத்தை அச்சுறுத்தி வலுக்கட்டாயமாக அடக்குவதா? எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இலியாஸ் முகமது தும்பே வெளியிட்ட அறிக்கை: வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் ஜனநாயக போராட்டத்தை அடக்குமுறைகளை கொண்டு பாஜக அரசு கையாளுவது மன்னிக்க முடியாத நடவடிக்கையாகும். மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான சட்டங்கள் மூலம் விவசாயத் துறையை கார்ப்பரேட்டுகள் மற்றும் முதலாளிகளுக்கு தாரைவார்க்கத் தயாராக உள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சி விவசாயிகளின் போராட்டங்களை ஆதரிக்கிறது. விவசாயிகள் போராட்டங்களை புறக்கணித்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து அரசாங்கத்தையும் எச்சரிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: