×

நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

புதுச்சேரி: நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்-மந்திரி நாரயணசாமி கடிதம் எழுதி உள்ளார். நிவர் புயல் புதுச்சேரி அருகே கடந்த 25-ம் தேதி நள்ளிரவில் கரையை கடந்ததையொட்டி சூறாவளி காற்றுடன் விடிய விடிய பலத்த மழை பெய்தது. ஏற்கனவே பெய்து இருந்த நிலையில் இந்த மழையும் சேர்ந்து கொண்டதால் நகர் மற்றும் கிராமப்புறங்களில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் வெங்கட்டாநகர், கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர், விடுதலைநகர், புஸ்சி வீதி, லெனின் வீதி, இந்திராகாந்தி சிலை, தட்டாஞ்சாவடி உள்பட பல இடங்களில் 5 ஆயிரம் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

இதையடுத்து பேரிடர் மேலாண்மை குழுவினருடன் சேர்ந்து பொதுப்பணி, நகராட்சி, காவல், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் சிக்கி வீடுகளை விட்டு வெளியே வர முடியாதவர்களை மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டு வந்து நிவாரண மையங்களில் தங்க வைத்தனர். அரசு சார்பில் அவர்களுக்கு குடிநீர், உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக முதற்கட்டமாக ரூ.100 கோடி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்-மந்திரி நாரயணசாமி கடிதம் எழுதி உள்ளார். புதுச்சேரியில் ஏராளமான வீடுகள், சாலைகள் புயலால் சேதமடைந்துள்ளதாக பிரதமருக்கு நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார். நிவர் புயலால் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Narendra Modi ,Chief Minister ,Puducherry ,phase , Nivar storm, Rs 100 crore, Modi, Puducherry Chief Minister, letter
× RELATED பிரதமர் நரேந்திரமோடி வீட்டுக்கும்...