தென்கொரிய நிறுவனம் சார்பில் ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ‘ஏர் குயின் மாஸ்க்’ வழங்கல்

சென்னை, :ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தென்கொரிய நிறுவனம் உயர் பாதுகாப்பு முகக்கவசங்ககளை நன்கொடையாக வழங்கியது. இதை டீன் மருத்துவர் தீரணிராஜன் பெற்றுக் கொண்டார். கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தீவிரமாகப் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக, தென் கொரியாவைச் சேர்ந்த மெரைன் பயோ கம்பெனி லிமிடெட் நிறுவனம் உயர் பாதுகாப்பு முகக் கவசங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த ஏர் குயின் முகக் கவசங்களை, சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் டீன் மருத்துவர் தீரணிராஜன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் டீன் தீரணிராஜன் நிருபர்களிடம் கூறியாதவது: கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் இவ்வகையான மேம்பட்ட பாதுகாப்பு கவசங்கள் மிகவும் அவசியமானவை, இன்றியமையாதவை. கொரோனாவுக்கு எதிரான போரில் முன் வரிசையில் இருந்து பங்கேற்போருக்கு இந்த உயர் வகை முகக் கவசங்களை வழங்கியுள்ள மெரைன் பயோ நிறுவனத்திற்கும், கோட்ரா அமைப்பிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். “ஏர் குயின் மாஸ்க்” எனக் குறிப்பிடப்படும் இந்த உயர் பாதுகாப்பு முகக் கவசங்கள்-ஆன்டி பாக்டீரியல் நானோ பைபர்கள் கொண்டது. அதாவது, பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படும் நுண்ணிய நூலிழைகள் கொண்ட துணியின் 3 அடுக்குகளால் ஆனது. அதனால் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராகச் சிறப்பானப் பாதுகாப்பை வழங்கும்.

இந்தத் துணியில் அமைந்த துளைகள் 1 (0.6 µm) மைக்ரோ மீட்டருக்கும் குறைவானது. எனவே காற்றில் மிதக்கும் பரவும் மிக நுண்ணிய நீர் திவலைகள் உட்பட அனைத்தையும் தடுக்கும் திறன் கொண்டது. அதனால் நுண்கிருமிகளைச் சுமந்து செல்லும் நீர் திவலைகளைத் தடுத்து நோய் பரவலுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இந்த முகக் கவசத்தின் எடை மிகக் குறைவு, இவை பணிச் சூழலுக்கு ஏற்ற வடிவமைப்பு கொண்டவை. மேலும், சர்வதேச தரத்திலான 2 வகை சான்றிதழ்களைப் பெற்றவை. இவ்வாணு அவர் கூறினார். தொடர்ந்து மெரைன் பயோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹியோ யுன்-யங் கூறுகையில், ‘ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை பணியாளர்களுக்கு உயர் பாதுகாப்பு முகக் கவசங்களை வழங்கி, உதவிக்கரம் நீட்டுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ‘ஏர் குயின்’ பிராண்டின் இந்த உயர் பாதுகாப்பு முகக் கவசங்கள் பெரும்பாலும் டெல்லி, கேரளா மற்றும் சென்னையில் உள்ள வணிகர்களால் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனைக்கு வினியோகிக்கப்படுகிறது’ என்றார்.

Related Stories:

>