டெல்லியை நோக்கி திரண்ட விவசாயிகள், காவல்துறையினரால் ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டனர் : எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

சென்னை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இலியாஸ் முகமது தும்பே வெளியிட்ட அறிக்கை:வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் ஜனநாயக போராட்டத்தை அடக்குமுறைகளை  கொண்டு பாஜக அரசு கையாளுவது மன்னிக்க முடியாத நடவடிக்கையாகும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் டெல்லியை நோக்கி திரண்ட விவசாயிகள், காவல்துறையினரால் ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டனர். பாஜக அரசின் உத்தரவின் பேரில் அரியானா மற்றும் டெல்லி காவல்துறையினர் காட்டு மிருகங்களைப் போல விவசாயிகள் மீது நடந்து கொள்வது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது மூலமாக அவர்களை முட்டாளாக்கி வருகிறது. விவசாயத் துறையை கார்ப்பரேட்டுகள் மற்றும் முதலாளிகளுக்கு தாரைவார்க்க மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகள் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி விவசாயிகளின் போராட்டங்களை ஆதரிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: