×

ஷேர் டாக்ஸி முறை இனி பெண்களுக்கு மட்டுமே... பீக் டைம்ல கட்டணத்தை 1.5 மடங்கு உயர்த்தலாம் : ஓலா, உபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

டெல்லி : வாடகைக் கார் நிறுவனங்களான ஓலா, உபர் போன்ற நிறுவனங்களின் விதிமுறைகளில் மத்திய அரசு பல அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மோட்டார் வாகன நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ள விதிமுறைகள் பின்வருமாறு..

*ஓலா, உபர் போன்ற வாடகைக் கார் நிறுவனங்கள் பரபரப்பான நேரத்தில் தங்கள் அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 1.5 மடங்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம்.

*வாடகைக் காருக்கு குறைவான தேவை இருக்கும் காலகட்டத்தில், நேரத்தில் அடிப்படைக் கட்டணத்திலிருந்து 50 சதவீதம் குறைவாகவும் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

*வாடகைக் கார் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றும் கார் வைத்திருக்கும் ஓட்டுநர்களுக்குக் கட்டணத்தில் 80 சதவீதத்தை வாடகைக் கார் நிறுவனங்கள் வழங்கிட வேண்டும்.

*சில மாநிலங்களில் வாடகைக் காருக்கான கட்டணத்தை மாநில அரசுகள் முடிவு செய்வதில்லை. அதுபோன்ற மாநிலங்களில் அடிப்படைக்கட்டணம் ரூ.25 முதல் ரூ.30 வரை நிர்ணயிக்கலாம்.

*சக பயணிகளுடன் கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளும்(ஷேர் டாக்ஸி) முறை இனி பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.

*ஷேர் டாக்ஸியில் முன்பதிவு செய்த பெண்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால், கட்டணத்திலிருந்து 10 சதவீதத்தை வசூலிக்க ஓட்டுநர்களுக்கு உரிமை உண்டு.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : women ,Government ,Uber ,Ola ,companies , Share Taxi, Ola, Uber, Federal, Action, Order
× RELATED சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி போலீசார், பெண்கள் பங்கேற்பு