தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு கர்நாடகா முதல்வரின் செயலாளர் தற்கொலை முயற்சி : கர்நாடகா போலீசார் விசாரணை

பெங்களூரு,கர்நாடகா முதல்வரின் செயலாளர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உறவினரும், அரசியல் செயலாளரான என்.ஆர்.சந்தோஷ், கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார். இவர், பெங்களூருவில் உள்ள டாலர் காலனியில் நேற்று முன்தினம் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயக்க நிலையில் இருந்த அவரை மீட்டு, பெங்களூருவில் உள்ள ராமையா நினைவு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்த போலீசாரும் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.  மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. தற்போது, ​​மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ‘சந்தோஷின் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவேன். தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஏன் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை. தற்ேபாது நலமுடன் உள்ளார். கவலைப்பட வேண்டியதில்லை. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து எனக்கு  எதுவும் தெரியாது, தற்போது, ​​மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்’ என்றார். தற்கொலைக்கு முயன்ற சந்தோஷ், அப்போதைய முதல்வர் சித்தராமையா ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் முதல்வர் எடியூரப்பாவுடன் செயல்பட்டார். மாநிலத்தில் ‘ஆப்ரேஷன் தாமரை’ மற்றும் பாஜக ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: