சந்தையில் கிலோ ரூ.1க்கு கொள்முதல் மல்லித்தழையை ஆற்றில் வீசிய விவசாயிகள்: பறிப்பு கூலி கிடைக்காது என வேதனை

தேனி: தேனி, ஆண்டிபட்டி, சின்னமனூர் பகுதிகளில் மல்லித்தழை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் மல்லித்தழையை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படும். சபரிமலை சீசனில் மல்லிதழைக்கு நல்ல கிராக்கி இருக்கும். இதை கருத்தில் கொண்டு, தேனி அருகே பள்ளபட்டி மற்றும் வாய்க்கால்பட்டி பகுதியில் விவசாயிகள் மல்லிதழை சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை நடந்து வருகிறது. ஆனால், சந்தையில் ஒரு கிலோ மல்லிதழை ரூ.1க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை வாய்க்கால்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்த மல்லிதழைகளை வைகை ஆற்றில் வீசி எறிந்தனர்.விவசாயி சீனி கூறுகையில், ‘மல்லி சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது மல்லித்தழை கிலோ ஒரு ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்வதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை பறிக்க ஆகும் கூலி செலவுக்கு கூட வராது என்பதால் வேறு வழி இல்லாமல் ஆற்றில் வீசினோம்’ என்றார்.

Related Stories: