×

சிறந்த மாநிலமாக இந்தியா டுடே விருது பெற உழைத்த அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நன்றி; அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம்: முதல்வர் உரை

சென்னை: நிவர் புயலின்போது சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். தாழ்வான பகுதிகளில் நீர்தேங்காமல் இருக்க அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்கும் என கூறினார். உரிய நடவடிக்கையால் நிவர் புயல் நேரத்தில் பெரும் பொருட்சேதம் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என கூறினார். தமிழ்நாட்டிற்கு தேவையான உதவிகளை செய்வதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது என தெரிவித்தார்.  அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய அதிகாரிகளுக்கு நன்றியும், பாராட்டும் என பேசினார். சென்னை வேளச்சரி, வரதராஜபுரம் பகுதிகளில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக சென்று மக்களுக்கு உதவிகளை செய்தனர். பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார்.

நிவர் புயலால் வேலூர், ராணிப்பேட்டையில் அதிக மழைப்பொழிவு உள்ளது என கூறினார். ஆந்திராவில் பெய்த மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார். வெள்ள பாதிப்பு குறித்து சிறப்பான நடவடிக்கை எடுத்த ஆட்சியர்களுக்கு பாராட்களை கூறினார்.  24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் தங்கி அமைச்சர், அதிகாரிகள் பணியாற்றினார்கள் என தெரிவித்தார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் தேவையான குழுக்களை அனுப்பி வைத்தார் என கூறினார்.

சிறந்த மாநிலமாக இந்தியா டுடே விருது பெற உழைத்த அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு வந்தவர்களுக்கு பாரட்டுக்களை தெரிவித்தார். உயரதிகாரிகளின் சிறப்பான செயல்பாடே தமிழகம் முதலிடத்திற்கான விருதைப் பெற காரணம் என கூறினார். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வாக உறுதுணையாக இருந்தவர்களுக்கு முதல்வர் நன்றி கூறினார். கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். கொரோனா தடுப்பு குறித்து 12 முறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கூட்டம் நடைபெற்று உள்ளதாக கூறினார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிக அளிவிலான பாதிசோதனை செய்யப்பட்டுள்ளது என கூறினார். கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக ரூ.7,525 கோடி செலவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கொரோனா நோயை கண்டறிவதற்காக அதிக அளவிலான ஆய்வகங்களை தமிழக அரசு அமைத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார். கோயிகள், திருமணங்கள், நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறினார். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கூறினார். அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கூறினார். கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மருந்துக்கள் கொள்முதல் செய்யப்பட்டு கையிருப்பில் உள்ளது என கூறினார். மொத்தமாக 15,000 மருத்துவ பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணிகளை தமிழகம் தான் சிறப்பாக மேற்கொள்வதாக பிரதமர் பாராட்டினார் என கூறினார். டிசம்பர் 15-ம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக் துவக்கப்படும் என தெரிவித்தார்.


Tags : ministers ,Chief Minister ,speech ,Tamil Nadu , Best State, India Today Award, Thank you, Tamil Nadu First, Chief Minister
× RELATED திகார் சிறையில் சந்தித்த பஞ்சாப்...