தொடர்ந்து ஒரு வாரமாக தங்கம் விலையில் வீழ்ச்சி.. 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,392 குறைந்து ரூ.36,592க்கு விற்பனை!!

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,392 அளவுக்கு விலை குறைந்துள்ளது. விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.கொரோனா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில், தங்கம் விலை உச்சத்தை தொட்டது. சாதாரண மக்கள் நகை வாங்க முடியுமா என்ற அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இது நகை வாங்குவார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்படியே விலை உயர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ஒரு சவரன் ரூ.43,328 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக காணப்பட்டது. நவம்பர்மாதத்தில் இதே நிலை தான் நீடித்தது.

இந்த நிலையில் கடந்த 23ம் தேதி ஒரு சவரன் 37,984, 24ம் தேதி 37,120, 25ம் தேதி 36,912க்கும்,26ம் தேதி 36,904க்கும், 27ம் தேதி சவரன் 36,712க்கும் விற்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இன்று காலை 6வது நாளாக தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,574-க்கும் , சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,592-க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1,392 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விலை குறைவால் நகைக்கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.வெள்ளியின் விலை கிராம் ரூ.64.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: