தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து திங்கள்கிழமை முதல்வரிடம் அறிக்கை தரப்படும்; 5 நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதல்வரிடம் நாளை மறுநாள் அறிக்கை தரப்படும் என ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். முதல்வரிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்து அரசாணை வெளியிடப்படும் எனவும் அமைச்சர் கூறினார். மேலும் அரையாண்டுத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்பது தவறான தகவல் என தெரிவித்தார். ஆசிரியர்கள் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்வது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என கூறினார். பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி 40 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அமைசை்சர் கூறியிருந்தார்.

கணினி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனவும், சிறப்பாசிரியர்களுக்கும் வழக்குகள் முடிந்தவுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்படும் என கூறினார். பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது என கூறினார். 14 பேர் கொண்ட அந்த குழுஅளித்த பரிந்துரையின் அடிப்படையில், 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என கூறியிருந்தார். மீதமுள்ள 60 சதவீதம் பாடங்களில் இருந்து தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படும் என்றார். கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், மாணவர்களின் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். எத்தனை போட்டித் தேர்வுகள் வந்தாலும், அதை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் விதமாக, பாடத்திட்டத்தை உருவாக்குவோம் என தெரிவித்தார்.

Related Stories:

>