கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் குறித்து அகமதாபாத், புனே, ஐதராபாத் உள்ள நிறுவனங்களில் நேரில் ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி

குஜராத்: அகமதாபாத் சைடஸ் பயோடெக் பார்க் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு குறித்து பிரதமர் மோடி நேரில் ஆய்வு நடத்துகிறார். கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் ஆய்வு செய்து வருகிறார். பிரதமர் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தில் ஆய்வு செய்ய உள்ளார். அகமதாபாத், புனே, ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்கிறார். இந்தியாவில் கடந்த சில வாரங்களாக சில வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் உள்ளது.

முதலில், குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலையில் நேரில் செல்கிறார். அந்நிறுவனம் தயாரிக்கும் ZYCOV-D தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிவதோடு, தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிடுகிறார். எனவே இதை தொடாடந்து மராட்டிய மாநிலம் புனேவில் சீரம் இன்ஸ்டிடியூட்டில் அஸ்ட்ரா ஜெனிகாவுடனும், இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும் இணைந்து COVISHIELD தடுப்பூசி உற்பத்தி பணியில் நடைபெற்று வருகிறது. புனேவில் 3-ம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணியளவில் தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோக ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும் அதைதொடர்ந்து தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் தயாரித்து வரும் COVAXIN கொரோனா தடுப்பூசி ஆலைக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளார்.

Related Stories: