உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக தேர்வு.. அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் முதல்வர் பழனிசாமி மனமார்ந்த நன்றி

சென்னை : உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக தேர்வானதற்கு முதல்வர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு.பழனிசாமி அவர்களின் அறிக்கையில்,

நேற்று (27.11.2020) நடைபெற்ற 11-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வுசெய்யப்பட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் விருது வழங்கப்பட்டமைக்காக  நான் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு  உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக தொடர்ந்து 6-வது முறையாக இவ்விருதினை பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.   தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையிலும் தலைசிறந்து முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் பின்பற்றக் கூடிய வகையிலும் செயல்படுகிறது என்று மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்திருப்பது, மருத்துவச் சேவையில்  ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

2015ஆம் ஆண்டு மின்சார விபத்தினால் இரு கைகளையும் இழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த திரு. நாராயணசாமி என்பவருக்கு 07.02.2018 அன்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைகள் மாற்று அறுவை சிகிச்சை  (க்ஷடையவநசயட ழயனே ஊயனயஎநசவீஉ ளுரஉஉநளளகரட கூசயளேயீடயவேயவவீடிஸீ) வெற்றிகரமாக செய்து சாதனை படைத்தது பாராட்டிற்குரியது. 

இது இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.  இச்சிகிச்சைக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.  மேலும், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தேவைப்படும் உயரிய நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகள் (ஐஅஅரஸீடி ளுரயீயீசநளளயவேள) எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் இதுவரை 1392கொடையாளர்களிடமிருந்து 8245 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 3005க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும்,  புதுக்கோட்டையில் நடைபெற்ற  உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மாரத்தானில் (ஆயசயவாடிஸீ) 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கலந்து கொண்டனர். இச்சாதனைகள் முறையே கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும், ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளன.  இதுபோன்ற செயல்பாடுகளால் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக தொடர்ந்து திகழ்கிறது.  இதன்மூலம் உடல் உறுப்பு தானத்தை  மக்கள் இயக்கமாகவே தமிழ்நாடு மாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் கோவிட்-19 பெரும் தொற்று காலத்திலும் சிறப்பு  நெறிமுறைகளை உருவாக்கி, 97 உடலுறுப்புகளை 27 உறுப்பு கொடையாளிகளிடமிருந்து பெற்று, தடையின்றி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு எனது தலைமையிலான அரசு சாதனை படைத்து வருகிறது.   இந்திய திருநாட்டில், தமிழ்நாடு  உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6-வது முறையாக முதன்மை மாநிலம் என்ற விருதினை மத்திய அரசிடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை இத்தருணத்தில் அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.  

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>