×

வேலூரில் இருந்து காஞ்சிபுரத்துக்கு 1,140 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தன

சென்னை: வேலூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள தனி கட்டிடத்தில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 6 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்காக நேற்று காலை காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 1,140 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூரில் இருந்து லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இப்பணியை வேலூர் தேர்தல் பிரிவு தாசில்தார் ராம் மேற்கொண்டார். வாக்குப்பெட்டிகளை காஞ்சிபுரம் மாவட்ட நிலம் எடுப்பு தாசில்தார் மோகன்குமார் பெற்றுக் கொண்டார்.

Tags : Vellore ,Kanchipuram , From Vellore to Kanchipuram 1,140 voting machines came
× RELATED காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில்...