×

கிராம மக்கள் சாலை மறியல்

செய்யூர்: செய்யூர் அடுத்த இடைகழிநாடு பேரூராட்சியில் நைனார் குப்பம், ஓதியூர், முட்டுக்காடு, பனையூர் குப்பம், தழுதாலி குப்பம், முதலியார் குப்பம் ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு நல்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், கடந்த 25ம் தேதி ஏற்பட்ட புயலால் அன்று இரவு கிராமங்களுக்கான  மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. புயல் கரையை கடந்து 2 நாட்களாகியும் மின் வினியோகம் வழங்கவில்லை. தொடர் மின்தடையால்  இங்கு வசிக்கும் முதியோர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர்.

இதையடுத்து, மின் இணைப்பை வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை முறையிட்டும், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாலைஈசிஆர் சாலையில்  எல்லையம்மன் கோயில் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து செய்யூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, உடனே மின் வினியோகம் செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், சுமார் அரைமணி நேரம் போக்குவரத்தும் பாதித்தது.Tags : road , Villagers block the road
× RELATED கம்மாபுரத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்: கிராம மக்கள் சாலை மறியல்