×

300 குடும்பங்களுக்கு திமுக சார்பில் உதவி

திருவள்ளூர்: திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவாலங்காடு ஒன்றியம், முத்துக்கொண்டாபுரம் ஊராட்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் காஞ்சிப்பாடி ச.விஜயகுமாரி சரவணன் ஏற்பாட்டில் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் 300 ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், ஆர்டிஇ.ஆதிசேஷன், ஒன்றிய, நகர செயலாளர்கள் எஸ்.மகாலிங்கம், சி.சு.ரவிச்சந்திரன், மோ.ரமேஷ், டி.கிருஸ்டி, கே.அரிகிருஷ்ணன், முன்னாள் நகரமன்ற தலைவர் பொன்பாண்டியன், தா.மோதிலால், டி.கே.பாபு, கொப்பூர் டி.திலிப்குமார், ம.புவனேஷ்குமார், கேஜிஆர்.ராஜேஷ்,  ஆர்.யுவராஜ், ஜெய்கிருஷ்ணா, விமல்குமார், திலகன், பாஸ்கர், கோபி, குமார், ஜானகிராமன், பாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.Tags : families ,DMK , Assistance on behalf of DMK to 300 families
× RELATED மலைவாழ் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி