×

பைக் டயர் வெடித்து டிரைவர் பரிதாப பலி

திருத்தணி: திருத்தணி ஒன்றியம் மாம்பாக்கசத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(36). டிப்பர் லாரி ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது கன்னிகாபுரம், மாம்பாக்கசத்திரம் நெடுஞ்சாலையில் செல்லும்போது கன்னிகாபுரம் இருளர் காலனி பகுதியில் திடீரென இருசக்கர வாகனத்தின் முன்சக்கர டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறி வாகனத்துடன் சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் வெங்கடேசனை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்தார்.Tags : bike tire , The bike tire exploded The driver was fatally shot
× RELATED புதுவை அருகே பயங்கரம் டிரைவர் சரமாரி வெட்டி கொலை