நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரகாஷ்ராஜ் உதவி

நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் உதவி செய்துள்ளார்.நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. செங்கல்பட்டில் பல இடங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதை அறிந்து, பிரகாஷ்ராஜ் தனது பவுண்டேஷன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை தனியார் ைமயங்களில் பிரகாஷ்ராஜ் தங்க வைத்துள்ளார். மேலும் அவர்களுக்கு உணவும் வழங்கினார்.

இதுகுறித்து பிரகாஷ் ராஜ் கூறும்போது, ‘நிவர் புயலால் பல்வேறு இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் குழு, எங்களால் முடிந்தவரை உதவிகள் செய்துள்ளோம். கோவளம் பகுதியில் புயலால் வீடுகளை விட்டு வெளியேறியவர்களுக்கு உணவும் இடமும் தந்துள்ளோம். எங்களுடன் இந்த சேவையில் ஈடுபட்ட தன்னார்வலர்களை பாராட்டுகிறேன்’ என்றார்.

Related Stories:

>