×

ஐதராபாத்தில் 5 தியேட்டர்கள் நிரந்தரமாக மூடல்

கொரோனா தாக்கம் காரணமாக திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் தியேட்டர் தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் சமீபத்தில் மட்டும் அபிராமி, ஏவிஎம் ராஜேஸ்வரி, மகாராணி, அகஸ்தியா ஆகிய 4 தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட்டன. இப்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, நாடு முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் படம் பார்க்க மக்கள் வருவதில்லை. இதனால் பல தியேட்டர்கள் நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் ஒரே சமயத்தில் 5 தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. சாந்தி மற்றும் கேலக்ஸி தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. இதேபோல் பகதூர்புராவில் ரமா, ஆர்டிசிஎக்ஸ் சாலையில்  மயூரி, மெஹதிபட்டினத்தில் அம்பா ஆகிய தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் இந்த ஐந்து தியேட்டர்களும் இந்த வாரத்தில் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 55 தியேட்டர்கள் மூடல்
 தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு 700 தியேட்டர்கள் வரை திறக்கப்பட்டன. எதிர்பார்த்த மக்கள் கூட்டம் வராததால் தமிழகம் முழுவதும் 55 தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள தேவி காம்ப்ளக்சில் படம் பார்க்க ரசிகர்கள் வராததால், நேற்று மட்டும் 4 திேயட்டர் களில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது.Tags : closure ,theaters ,Hyderabad , 5 theaters in Hyderabad Permanent closure
× RELATED அரசுடன் நடந்த பேச்சவார்த்தையில்...