×

வீட்டை உடைத்து 38 சவரன் 1.25 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை அசோக் நகர் 15வது அவென்யூவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (65). நிவர் புயல் காரணமாக மின்தடை மற்றும் மழைநீர் தேங்கியதால், இவர் கடந்த 24ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 38 சவரன் நகை, 1.25 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.  

போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், பழைய குற்றவாளிகளான எம்ஜிஆர் நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜேஷ் (18), பிரகாஷ் (20), விக்னேஷ் (21) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை 5 மணி நேரத்தில் கைது செய்து, 30 சவரன் நகைகள், ₹40 ஆயிரத்தை மீட்டனர்.Tags : house , Breaking the house 38 Shaving 1.25 lakhs Robbery
× RELATED சொர்க்கவாசல் வழியாக 1.25 லட்சம் பேர் தரிசனம்