×

மது அருந்த பணம் தர மறுத்ததால் இரும்பு ராடால் அடித்து தாய் கொலை: மகன் வெறிச்செயல்

சென்னை: நெற்குன்றம் பெருமாள் கோயில் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆதியம்மாள் (65). இவரது கணவர் ஆறுமுகம் இறந்துவிட்டார். தம்பதிக்கு 2 மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் மகேஷ்குமார் (38), மதுரை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருடன் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து  சென்றுவிட்டார்.தற்போது, நெற்குன்றத்தில் தனது 2 குழந்தைகளுடன் வீட்டின் கீழ்தளத்தில் மகேஷ்குமார் வசித்து வருகிறார். மேல்தளத்தில் ஆதியம்மாள் வசித்து வந்தார்.குடிப்பழக்கத்துக்கு அடிமையான மகேஷ்குமார், நேற்று முன்தினம் இரவு மது அருந்த  ஆதியம்மாளிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  ஆத்திரமடைந்த மகேஷ்குமார் அருகில் கிடந்த இரும்பு ராடால் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் ஆதியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர், மகேஷ்குமார் கீழ்தளத்துக்கு சென்று, தூங்கி யுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் ஆதியம்மாள் வீட்டைவிட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் முதல் மாடிக்கு சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரவித்தனர். விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து மகேஷ்
குமாரை  கைது செய்தனர்.Tags : For refusing to pay for alcohol Mother killed by iron rod: son hysteria
× RELATED போதையில் தாயை அடித்து கொன்ற மகன்