×

ஜனவரிக்கு பிறகு கூட்டணி பற்றி முடிவு பிரேமலதா அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை செம்மஞ்சேரியில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘செம்மஞ்சேரி பகுதியில் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த பகுதியை சூழ்ந்துள்ள மழைநீர் எப்பொழுது வடியும் என்பது கேள்விக்குறிதான். இன்றுவரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது. தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு ஜனவரியில் நடந்த பிறகு கூட்டணி குறித்து விஜயகாந்த் தெரிவிப்பார்’’ என்றார்.Tags : Premalatha ,alliance , After January Premalatha announcement of decision about alliance
× RELATED அதிமுக கூட்டணி குறித்து தேர்தல்...